கோவையில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளில் தேதி காலாவதியான மது விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொங்கல் பண்டிகை என்ற பெயரில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், மக்களின் உயிர் மற்றும் உடல்நலத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், காலாவதியான மதுவை விற்பனைக்கு வைத்திருப்பது திமுக அரசின் மிக மோசமான செயல்.
மது விற்பனை மூலம் ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அரசு, குறைந்தபட்சம் மதுவின் தரத்தைக்கூட பாதுகாக்கத் தவறியுள்ளது. இது திட்டமிட்ட குற்றம்.
இதையும் படிங்க: கைரேகை பதியலயா.. அப்போ கண் கருவிழி ஸ்கேன்..!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே… pic.twitter.com/uuDYk85usQ
— K.Annamalai (@annamalai_k) January 13, 2026
காலாவதியான மதுவை உட்கொள்வதால் உடல்நலக் கேடு ஏற்படுவதோ, உயிரிழப்பு ஏற்படுவதோ முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கோ, திமுக அமைச்சர்கள் குடும்பத்தினருக்கோ நடக்கப் போவதில்லை. அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும்தான் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்டுவது முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளில் தரக் குறைவான மது விற்பனை, போலி மது, கலப்பட மது போன்ற புகார்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்நிலையில், பொங்கல் போன்ற பண்டிகைக் காலத்தில் அதிக விற்பனைக்காக காலாவதியான மது விற்பனை செய்யப்படுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த கடும் சாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிகரெட் பதுக்கல்!! வரி உயர்வுக்கு முன்னே பதுக்கல்!! இப்போ தாறுமாறாக எகிறும் விலை! அதிகரிக்கும் டிமாண்ட்!!