நீலகிரியில் நடைபெறும் தனியார் பள்ளி பொன்விழா நிகழ்ச்சியில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி பின்னர் கலந்துரையாடினார். அப்போது, ராகுல் காந்தியிடம் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவ மாணவிகள் கேட்டுக்கொண்டனர். பள்ளிக்காலத்தில் என்னை ஆசிரியர்கள் சமாளிக்க மிகவும் சிரமப்படுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
பள்ளி காலத்தில் நான் சுட்டிப் பையனாக இருந்தேன் என்றும் பள்ளி காலத்து நினைவு குறித்து பகிர்ந்து கொண்டார். நீங்கள் என்ன ஆகவேண்டும் என மாணவர்களிடம் கேட்டேன் என்றும் ஒரு மாணவர் கூட அரசியல்வாதியாக போகிறேன் என்று கூறவில்லை எனவும் தெரிவித்தார். இந்தியாவிற்கு சிறந்த கல்வி அமைப்பு குறித்து மாணவன் கேள்வி கேட்டார். அப்போது பதில் அளித்த ராகுல் காந்தி, கல்வி தனியார்மயமாக கூடாது என்றும் நாட்டிற்கு சிறந்த கல்வி அமைப்பு தேவை எனவும் தெரிவித்தார். இந்திய ஜனநாயகம் மீது தற்போது தாக்குதல் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

உற்பத்தி துறையில் சீனர்கள் தான் தற்போது முன்னிலையில் இருக்கிறார்கள் என்றும் தொழில்துறையில் பரவலாக வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றும் இந்த காலத்தில் அனைத்து தகவல்களும் எளிதாக கிடைக்கிறது எனவும் தெரிவித்தார். ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் நாட்டை உருவாக்க விரும்புகிறேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். மாணவர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார் அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
இதையும் படிங்க: தண்ணீரா? விஷமா? நிர்வாகத்துக்கு நல்ல தூக்கம்...இந்தூர் விவகாரத்தில் ராகுல்காந்தி காட்டம்...!
பெண்களை மதிப்பது எப்படி என்ற மாணவனின் கேள்விக்கு ஆண்களை விட பெண்கள் திறமையானவர்கள் என்று ராகுல் காந்தி பதிலளித்தார். ஆண்களைவிட பல மடங்கு திறமையானவர்கள் பெண்கள் என்றும் தெரிவித்தார். இறுதியாக ராகுல் காந்தி தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: சோனியா, ராகுல் காந்திக்கு மிகப்பெரிய நிம்மதி... நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED தலையில் இடியை இறங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்...!