ஜம்மு: தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான பரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு ஜம்மு கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி உட்பட பலர் அவருடன் இருந்தனர்.
விழா முடிந்து அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நபர் கூட்டத்திற்கு மிக அருகில் வந்து, பரூக் அப்துல்லா மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அந்த தோட்டு அவரை தாக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, தாக்குதல்காரரை மடக்கிப் பிடித்தனர். இதில் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயத்திற்கு ஆளானார். பரூக் அப்துல்லா பாதுகாப்பாக உள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் கமல்சிங் ஜம்வால் (வயது 63) என்பவர் ஜம்மு புராணி மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு உரிமம் பெற்ற துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோர தாண்டவம் ஆடும் ஈரான்!! எல்லாரும் எச்சரிக்கையா இருங்க! நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!!

விசாரணையில், அவர் கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், இது தனிப்பட்ட விரோதம் என்றும் கூறியுள்ளார். அவர் மது போதையில் இருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை பயங்கரவாத தொடர்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://www.ndtv.com/video/farooq-abdullah-news-man-aims-at-farooq-abdullah-tries-to-pull-trigger-caught-in-time-1070810
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மரணம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம் சமூகத்தினர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், பரூக் அப்துல்லா மீதான துப்பாக்கி சூடு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் Z+ பாதுகாப்பு பெற்ற தலைவர்கள் மீதான பாதுகாப்பு குறைபாடுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட பலரும் இதை கொலை முயற்சி என்று குறிப்பிட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பவாரியா கேங்! மீண்டும் தமிழகத்தில் நுழைத்த கொடூர கும்பல்? தீரன் படம் நினைவிருக்கா?