இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: சுதந்திரமாக மீன்பிடிப்பது எப்போது? பாவமா தெரியலையா... மீனவர்களை மீட்க இபிஎஸ் வலியுறுத்தல்...!
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 31 பேர் நவம்பர் 3 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மீனவர்கள் 31 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கைதான 30 ராமேஸ்வரம் மீனவர்கள்... இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!