8 வயது முதல் 80 வயது வரை அனைத்து தரப்பு கொல்கத்தா மக்களையும் இன்று மெஸ்ஸி காய்ச்சல் ஆட்டிப்படைக்கிறது. கால்பந்து ஜாம்பவானும், அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தாவிற்குள் கால் பதித்துள்ளார்.
மெஸ்ஸியும் அவரது அணியினரும் ‘கோட் இந்தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13ம் தேதி) முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர். கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு ரசிகர்களுடன் நடைபெறும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து விஐபி சாலையில் உள்ள பூமி கடிகார கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்கிறார். இது உலகிலேயே மெஸ்ஸிக்கு அமைக்கப்பட்ட மிக உயர்ந்த சிலையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் அனுமதி மறுத்துள்ளதால் மெஸ்ஸி தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்தே காணொலி காட்சி மூலம் சிலையை திறந்து வைக்கிறார். பின் சால்ட்லேக் மைதானத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: அடிதூள்... விடுபட்ட மகளிருக்கு 3ம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கப்படும்... அமைச்சர் சொன்ன குட்நியூஸ் ...!
இதற்காக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸியை வரவேற்க நள்ளிரவு முதலே ரசிகர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆவலுடன் காத்திருந்தனர். சரியாக அதிகாலை 3.20 மணிக்கு கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொல்கத்தாவில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணிக்கு ஐதராபாத் புறப்படும் மெஸ்ஸி, ஐதராபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ஐதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கும் காட்சி போட்டியில் விளையாடுகிறார். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும், இரவு கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் 45 நிமிட பேஷன் ஷோவிலும் பங்கேற்கிறார். நாளை மறுநாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
இதையும் படிங்க: “மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயர்த்தப்படும்...” - இல்லத்தரசிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த குட்நியூஸ்...!