டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் பீகார் காவல்துறையும் இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பீகாரைச் சேர்ந்த நான்கு தேடப்படும் குண்டர் தடுப்புச் சட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.
பீகாரைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லி வந்த பீகார் போலீசார், டெல்லி போலீசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை 2:20 மணியளவில், பீகார் காவல்துறை மற்றும் டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு இணைந்து டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சவுக் மற்றும் பன்சாலி சவுக் இடையே உள்ள பகதூர் ஷா மார்க்கில், தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகளை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மறுபடியும் முதல்ல இருந்தா? - அந்த வார்த்தையைச் சொல்லி அன்புமணியை உசுப்பேற்றிய அருள் எம்.எல்.ஏ... !
அப்போது டெல்லி போலீசார் நடத்திய 4 குற்றவாளிகளையும் துப்பாக்கியால் சுட்டதில், அனைவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து நான்கு குற்றவாளிகளும் ரோஹினியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த என்கவுன்ட்டரில் பீகாரைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (25), பிமலேஷ் மஹ்தோ (25), மனிஷ் பதக் (33), மற்றும் அமன் தாக்கூர் (21) ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். ரஞ்சன் பதக், பிமலேஷ் மஹதோ மற்றும் மணீஷ் பதக் ஆகியோர் பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் வசிப்பவர்கள் என்றும், அமன் தாக்கூர் டெல்லி காரவால் நகரில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த 4 பேரும் பீகாரில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கும்பல் ஒரு பெரிய குற்றச் செயலைத் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததையடுத்தே டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் பீகார் காவல்துறை இணைந்து கூட்டு நடவடிக்கையில் இறங்கியதாகவும், இந்த நால்வருக்கும் எதிராக பீகாரில் கொலை மற்றும் ஆயுதக் கொள்ளை உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு பேரும் 2015 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை உட்பட பல கொலைகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை வழக்குகளில் பீகாரில் தேடப்பட்டு வந்தவர்கள். டெல்லி காவல்துறை மற்றும் பீகார் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் மற்றும் குற்ற சம்பவ விசாரணை குழுக்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: காலையிலேயே ஸ்டாலின் காதுகளை எட்டிய துக்க செய்தி... திமுக எம்.எல்.ஏ. திடீர் மரணம்...!