குஜராத் அரசு சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவு நாடு முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக காதல் திருமணங்களை நோக்கமாகக் கொண்டு, திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்யும்போது பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இது 2006-ஆம் ஆண்டு Gujarat Registration of Marriages Act-இல் திருத்தம் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதி. இந்த முடிவை குஜராத் துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான ஹர்ஷ் சங்கவி சட்டசபையில் அறிவித்தார். அரசின் தரப்பில், இது "love jihad" போன்றவற்றைத் தடுப்பதற்கும், பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், சனாதன தர்மத்தை காப்பதற்கும் தேவையான நடவடிக்கை என்று சொல்கிறார்கள்.

நாங்கள் காதல் திருமணங்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெளிவுபடுத்தினாலும், ரகசியமாகவோ அல்லது ஏமாற்றுதலுடனோ நடக்கும் திருமணங்களைத் தடுக்க இது அவசியம் என்று கூறுகின்றனர். இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், திருமண பதிவுக்கு விண்ணப்பிக்கும்போது மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும்—தங்கள் பெற்றோருக்கு இந்த திருமணம் பற்றி தெரியுமா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: “அதைச் சொல்ல பாஜக விஜயகாந்தின் வாரிசு இல்ல” - அமைச்சர் ரகுபதி காட்டமான பதிலடி...!!
பெற்றோரின் பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் போன்ற விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட பிறகு, உதவி பதிவாளர் 10 வேலை நாட்களுக்குள் இரு தரப்பு பெற்றோருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனுப்ப வேண்டும்.மேலும், திருமண பதிவு செயல்முறை இனி குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகும். இந்த திருத்தம் என்பது காதல் திருமணங்களை தடுத்து முட்டுக்கட்டை போடும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!