ஹஜ் பயணம் என்பது இஸ்லாமிய மதத்தின் ஐந்து முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு புனித யாத்திரையாகும். இது ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக விளங்குகிறது. மக்காவில் உள்ள கஅபா எனும் புனித ஆலயத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த யாத்திரை, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான மதச் சடங்காகும். இஸ்லாமிய நாட்காட்டியின் துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12-ஆம் நாள் வரை இந்த பயணம் நடைபெறுகிறது.
உடல், மன, மற்றும் பொருளாதார ரீதியாக தகுதியுடைய ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமியக் கடமையாகும்.ஹஜ் பயணத்தின் முக்கிய நோக்கம், இறைவனிடம் முழுமையாக சரணடைவதும், அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்மீகப் புனிதத்தை அடைவதுமாகும். இந்த யாத்திரையின் ஒவ்வொரு சடங்கும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. இது மனிதனின் பாவங்களை மன்னிக்கவும், அவனை இறைவனுக்கு நெருக்கமாக்கவும் உதவுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்திற்கு இந்த முறை பலர் பதிவு செய்துள்ளதாகவும் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாராக இருந்தாலும் கலங்கி போயிருப்பாங்க… அப்படி ஒரு துயரம்! அன்பில் மகேஷ் வேதனை…!
இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் மறு மார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் ஐந்தாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை பயணம் செய்து கொள்ளலாம் என்ற தகவலை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டம்! மக்கள் மீது துப்பாக்கிச்சூடு! போர்க்களமான காட்சிகள்!