சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது உலகளாவிய அளவில் மனித உரிமைகளுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். இது உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்லாமல், மனரீதியான, உணர்வுரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்நாள் முழுவதும் நிழலிடும் ஒரு கொடுமையாகும்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டு மட்டும் 18 வயதுக்குட்பட்ட 1,11,569 சிறுமிகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவை அறிமுகமான நபர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த வன்கொடுமைகள் பெரும்பாலும் வீட்டுக்குள், பள்ளி, உறவினர் வீடு, அண்டை வீடு போன்ற பாதுகாப்பான இடங்களிலேயே நடைபெறுகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் 13 வயது சிறுமியை 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ராஜேந்திரன் என்று 62 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ... பாலியல் தொல்லை... அச்சத்தில் மாணவிகள்... ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ...!
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமிக்கு ஏழு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: பாய்ந்தது போக்சோ... சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது...!