மும்பையில் உள்ள வசாய் நைகாவ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் ரெய்டு நடத்தி உள்ளன.
அப்போது 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பங்களாதேஷில் இருந்து அவர் வந்துள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமையை தவிர்க்க... குஜராத் டிராஃபிக் போலீஸ் ஒட்டிய போஸ்டர்.. கிளம்பிய சர்ச்சை..!!
அந்த சிறுமியை குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் அப்போது, மூன்று மாதத்தில் 200 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

பாலியல் தொழில் தொடர்பாக ரகசிய தகவல் கொடுத்த தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி பேசுகையில், நீக்கப்பட்ட சிறுமி பள்ளிகள் படித்த போது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் பெற்றோருக்கு பயந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
அந்தப் சிறுமியை இந்தியாவிற்குள் அழைத்து வந்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்தி உள்ளதாகவும் அவரை 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாஷி மற்றும் பேலாப்பூர் பகுதியில் மைனர் பெண்களைச் சிலர் பிச்சை எடுக்க வைத்துள்ளதாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கொடுத்த அவர், கிராமங்களில் இருந்து குழந்தைகளை திருடி மைனர் சிறுமிகளிடம் கொடுத்து பிச்சை எடுக்க வைப்பதாகவும், மைனர் பெண்கள் விரைவில் பருவமடைய ஹார்மோன் ஊசி போட்டு அவர்கள் பருவம் அடைந்ததும் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தி. மலை கிரிவலம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது..!