கடந்த ஏப்ரல் 22ல நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்ல நடந்த ஒரு கொடூரமான சம்பவம். இதுல 26 பேர் கொல்லப்பட்டதுக்கு பதிலடியா, இந்திய ராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’னு ஒரு பெரிய நடவடிக்கையை மே 2025-ல தொடங்கிச்சு.
இந்த ஆப்பரேஷன்ல, பாகிஸ்தான்ல இருக்குற பயங்கரவாத முகாம்களை குறிவெச்சு, இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணைகள், இஸ்ரேலிய ஹாரப் ட்ரோன்கள், உள்நாட்டு ஆகாஷ், எஸ்-400 மாதிரியான பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழிச்சு, பாகிஸ்தானோட விமானப்படை, ரேடார், கட்டளை மையங்களை பெரிய அளவுல பாதிச்சது.
இந்த வெற்றி, இந்தியாவோட பாதுகாப்பு திறனை உலகத்துக்கு காட்டுச்சு. ஆனா, இந்த ஆப்பரேஷன் இந்தியாவுக்கு ஒரு பாடத்தையும் கத்துக்கொடுத்து. நவீன போர்கள்ல ட்ரோன்கள், குறிப்பா நீண்ட தூரம் சென்று தாக்குற உயர் தொழில்நுட்ப ட்ரோன்களோட முக்கியத்துவம் இதுல தெளிவாகிடுச்சு.
இதையும் படிங்க: அதிகபட்சம் நவம்பர்தான் டைம்!! வரப்போகுது பெரிய ஆஃபர்.. இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் முன்னேற்றம்..!
இதனால, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இப்போ ஆயுத கொள்முதலுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்துட்டு இருக்கு. குறிப்பா, அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய விமானப்படைக்கு போர் ட்ரோன்கள் வாங்க அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் தீவிரமா முயற்சி செஞ்சுட்டு இருக்கு. இந்த ஒப்பந்தம் 35 மில்லியன் டாலர் மதிப்புல இருக்கும்னு சொல்லப்படுது.

இந்த ஒப்பந்தம் விரைவுல கையெழுத்தாகி, 2026 முதல் காலாண்டுல இந்த ட்ரோன்கள் இந்தியாவுக்கு வந்துடுமாம். இந்த ட்ரோன்கள், உக்ரைன்-ரஷ்யா போர்ல உக்ரைன் பயன்படுத்துன ‘ஷீல்ட் ஆலின் விபேட்’ மாதிரியானவை. இவை ஜிபிஎஸ் இல்லாம, நெட்வொர்க் ஜாம் செய்யப்பட்ட இடங்கள்ல கூட துல்லியமா தாக்க முடியும்ங்குறது இவைகளோட சிறப்பு.
இந்த ட்ரோன்கள் இப்போ இந்தியாவோட உள்நாட்டு ட்ரோன்களை விட மேம்பட்டவை, துல்லியமா தாக்குற திறன்ல சூப்பர்னு பாதுகாப்பு வல்லுநர்கள் சொல்றாங்க. ஆப்பரேஷன் சிந்தூர்ல இந்தியா பயன்படுத்துன டி4எஸ் (Drone Detect, Deter, Destroy) மாதிரியான உள்நாட்டு அமைப்புகள், பாகிஸ்தானோட சீன, துருக்கி ட்ரோன்களை எளிதா முறியடிச்சது ‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்களோட வெற்றியை காட்டுச்சு.
ஆனாலும், நவீன போர்கள்ல இன்னும் மேம்பட்ட ட்ரோன்கள் தேவைன்னு இந்தியா உணர்ந்திருக்கு. இந்த அமெரிக்க ட்ரோன்கள், இந்தியாவோட பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆகாஷ், எஸ்-400 மாதிரியான அமைப்புகளோட இணைஞ்சு, எல்லைப் பாதுகாப்பை இன்னும் வலுப்படுத்தும்.
இந்த ஒப்பந்தம் இந்திய விமானப்படையோட திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகும்னு எதிர்பார்க்கப்படுது. இந்த ட்ரோன்கள் வந்த பிறகு, எல்லையில பயங்கரவாத முகாம்களை குறிவெச்சு தாக்குறதுக்கு இந்தியாவுக்கு புது வலிமை கிடைக்கும். பாகிஸ்தான் மட்டுமில்ல, சீனா மாதிரியான நாடுகளோட எல்லைப் பதற்றங்களையும் எதிர்கொள்ள இது உதவும்.
இந்த ஒப்பந்தம், இந்தியாவோட பாதுகாப்பு உத்திகளை உலக அளவுல மேலும் உயர்த்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துல ஒரு முக்கிய மைல்கல்லா இருக்கும்னு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் நம்புது. இந்த ட்ரோன்கள் வந்ததும், இந்தியா இன்னும் தன்னம்பிக்கையோட, துல்லியமா பயங்கரவாதத்தை எதிர்க்க முடியும்னு எல்லாரும் ஆவலோட எதிர்பார்க்குறாங்க.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., சண்டையை நிறுத்துனதே நான்தான்! மீண்டும் மீண்டும் வாய் விடும் ட்ரம்ப்!!