எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 13 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பொதுமக்களின் வீடுகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கிய நிலையில் பாதுகாப்பு கருதி எல்லையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்துமீறும் பாக்., தணியாத பதற்றம்..! பிரதமருடன் பாதுகாப்பு ஆலோசகர் தீவிர ஆலோசனை..!

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மருந்து பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வசிக்கும் இடத்திலிருந்து புறப்படுமாறு அறிவுறுத்திய ராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு மாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரையுமே பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் முப்படைகளும் தயார்..! பாகிஸ்தானை பதம் பார்க்க காத்திருக்கும் வீரர்கள்..!