பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் போர் ஒத்திகை நடத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவு நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மே 7ஆம் தேதி போர்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போர்க்காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஒத்திகை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. மேலும் சிவில் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைரன்கள் மூலம் மக்களை எச்சரிப்பது, பாதுகாப்பான பகுதிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் ஒத்திகை மூலம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! இந்திய ராணுவ இணையதளம் மீது பாக். சைபர் அட்டாக்..!

தாக்குதல் நடந்தால் தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் துறை உள்ளிட்டவை எப்படி செயல்பட வேண்டும் என்பதும் ஒத்திகையில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மே 7ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தான் உடன் போர் வர வாய்ப்புள்ளது என கர்னல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் அனைத்தும் முடங்கியுள்ளதாக மேஜர் மதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை அடித்தே ஆக வேண்டும்... நாங்கள் இருக்கிறோம்... மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புடின்..!