அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிரா அடாவடி காட்டி, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிச்சு அதிர்ச்சி கொடுத்திருக்காரு. ஆனா, இந்தியாவும் பதிலுக்கு ஒரு பெரிய புயலை உருவாக்கியிருக்கு! ட்ரம்போட இந்த வரி அடியை எதிர்கொள்ள, இந்தியா அமெரிக்காவோட ரூ.25,572 கோடி மதிப்புள்ள போர் விமான ஒப்பந்தத்தை நிறுத்தி வச்சிருக்கு.
ட்ரம்ப் முதல்ல ஜூலை 2025-ல இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகுற பொருட்களுக்கு 25% வரி போடறேன்னு அறிவிச்சாரு. இது ஆகஸ்ட் 7-லிருந்து அமலுக்கு வந்துச்சு. இப்போ மறுபடியும் 25% கூடுதல் வரி விதிச்சு, மொத்தம் 50% வரியாக உயர்த்தியிருக்காரு. இந்த வரி உயர்வுக்கு காரணம், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குறது தொடர்ந்து இருக்குறதுதான்.
ட்ரம்ப் சொல்றது, “இந்தியாவோட இந்த எண்ணெய் கொள்முதல், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு நிதி உதவி செய்யுது”னு. ஆனா, இந்தியா பதிலுக்கு, “நம்ம 140 கோடி மக்களோட எரிசக்தி பாதுகாப்புக்கு இந்த எண்ணெய் அவசியம். மேற்கத்திய நாடுகள்தான் முன்னாடி இதை ஊக்கப்படுத்தினவங்க, இப்போ குறை சொல்றாங்க”னு சொல்லியிருக்கு.
இதையும் படிங்க: ரஷ்யா உடன் நெருக்கம் காட்டும் இந்தியா!! வரியை 50% ஆக உயர்த்தினார் அதிபர் ட்ரம்ப்.. உச்சத்தில் வரி வர்த்தகப்போர்!!
இந்த வரி உயர்வு, இந்தியாவோட டெக்ஸ்டைல்ஸ், நகைகள், ஆட்டோ பாகங்கள், கடல் உணவு மாதிரியான ஏற்றுமதி பொருட்களை பாதிக்குது. இதனால இந்த பொருட்களோட விலை அமெரிக்காவுல உயர்ந்து, இந்தியாவோட போட்டித்தன்மை குறையுது.

இந்த அடாவடிக்கு இந்தியா பதிலடி கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. அமெரிக்காவோட போயிங் நிறுவனத்திடமிருந்து பி-8ஐ பொசைடன் கடல்சார் கண்காணிப்பு போர் விமானங்களை வாங்குற ஒப்பந்தத்தை நிறுத்தி வச்சிருக்கு. இந்த விமானங்கள் இந்திய பெருங்கடலில் ரோந்து பணிகளுக்கும், சீனாவோட கடற்படை நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ரொம்ப முக்கியம்.
2009-ல 12 விமானங்கள் வாங்கப்பட்டு, 2016-ல மேலும் 4 விமானங்கள் ஒப்பந்தமாகி வந்திருக்கு. 2021-ல 6 விமானங்களை ரூ.25,572 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் இறுதி செஞ்சிருந்தாங்க, ஆனா செலவு அதிகமானதால இது தாமதமாகிருந்துச்சு. இப்போ ட்ரம்போட வரி அடியால, ஆகஸ்ட் 3, 2025-ல இந்த ஒப்பந்தத்தை பொறுத்து வைக்க இந்திய ராணுவ அமைச்சகம் முடிவு செஞ்சிருக்கு. இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரல, ஆனா இந்த முடிவு இந்தியாவோட பதிலடியோட முதல் படியா பார்க்கப்படுது.
இந்தியா இது மட்டுமில்லாம, அமெரிக்காவோட வேற சில வர்த்தக ஒப்பந்தங்களையும் மறு ஆய்வு செய்ய ஆரம்பிச்சிருக்கு. இது இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுல பெரிய விரிசலை உருவாக்கலாம். இந்த முடிவு ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு ஒரு வலு சேர்க்குது, ஏன்னா இந்தியா இப்போ உள்நாட்டு ஆயுத உற்பத்தியை முன்னெடுக்க, DRDO மாதிரியான அமைப்புகளோட மாற்று வழிகளை தேட ஆரம்பிச்சிருக்கு. ஆனா, இந்த ஒப்பந்த நிறுத்தம் இந்தியாவோட பாதுகாப்பு திறனை குறுகிய காலத்துக்கு பாதிக்கலாம்னும் பேச்சு அடிபடுது..
இதையும் படிங்க: அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி கிடையாது! அதிரடியை ஆரம்பித்தார் மோடி!! ட்ரம்புக்கு ஆப்பு!!