ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒரு புது மைல்கல்லை எட்டியிருக்கு. ஜூலை 24, 2025-ல, ட்ரோனில் இருந்து ஏவப்படுற துல்லியமான வழிகாட்டப்பட்ட ஏவுகணை (UAV Launched Precision Guided Missile - ULPGM-V3) சோதனையை வெற்றிகரமா நடத்தியிருக்காங்க.
இந்த சோதனை, கர்னூல் மாவட்டத்துல உள்ள நேஷனல் ஓபன் ஏரியா ரேஞ்ச் (NOAR) பரிசோதனை மையத்தில் நடந்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வெற்றியை X-ல பதிவு செய்து, “இந்தியாவோட பாதுகாப்பு திறனுக்கு இது ஒரு பெரிய முன்னேற்றம்”னு பாராட்டியிருக்கார்.
DRDO-வோட இந்த சாதனை, இந்திய ராணுவத்தோட நவீன யுத்த தொழில்நுட்பத்துல ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுது.இந்த ULPGM-V3 ஏவுகணை, ட்ரோனில் இருந்து இலக்கை துல்லியமா தாக்குற வகையில வடிவமைக்கப்பட்டிருக்கு. இதோட முக்கிய அம்சங்கள், இமேஜிங் இன்ஃப்ராரெட் (IIR) சீக்கர்ஸ், டூயல்-த்ரஸ்ட் இன்ஜின், எடை குறைவு, மற்றும் டேன்டெம் வார் ஹெட் (வெடிபொருள் எதிர்ப்பு கவசத்தை தகர்க்குறது) மாதிரியானவை.
இதையும் படிங்க: அரசியலை விட்டே போயிடுறேன்!! ஊழல் குற்றச்சாட்டுகளால் நொந்துபோன ரோஜா!
இந்த ஏவுகணை, மலைப்பகுதிகள், எல்லைப் பகுதிகளில் இலக்குகளை தாக்குறதுக்கு ரொம்ப பயன்படும். எல்லையில், குறிப்பா பாகிஸ்தானோட எல்ஓசி, சீனாவோட எல்ஏசி பகுதிகளில், தரையில் இருந்து ஏவுற ஏவுகணைகள் போக முடியாத இடங்களுக்கு இந்த ட்ரோன் ஏவுகணைகள் செலவு குறைவா, பாதுகாப்பா இலக்கை அழிக்கும்.

இதனால, இந்திய ராணுவத்துக்கு இது ஒரு மாபெரும் முன்னேற்றமா இருக்கு.ராஜ்நாத் சிங், X-ல பதிவு செய்து, “DRDO-வோட இந்த வெற்றி, இந்திய தொழில் துறை இப்போ முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி, உற்பத்தி செய்ய தயாரா இருக்குனு நிரூபிக்குது”னு சொல்லியிருக்கார்.
இந்த சோதனையில், DRDO மட்டுமல்ல, MSME-க்கள், ஸ்டார்ட்அப்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், மற்றும் Development-cum-Production Partners (DcPPs) ஆகியவையும் பங்கு வகிச்சு, இந்தியாவோட ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) திட்டத்துக்கு பலம் சேர்த்திருக்காங்க.
இந்த ஏவுகணையோட முக்கிய பாகங்கள், வழிகாட்டல் அமைப்பு, இன்ஜின், வெடிபொருள் எல்லாமே இந்தியாவுலயே உருவாக்கப்பட்டவை, இது நம்ம தன்னிறைவு திறனை காட்டுது. கர்னூல் NOAR மையம், இந்தியாவோட முக்கிய பாதுகாப்பு சோதனைகளுக்கு மையமா இருக்கு.
இதுக்கு முன்னாடி, இங்கே லேசர் ஆயுதங்கள், ஆன்டி-ட்ரோன் சிஸ்டம்கள் மாதிரியானவை சோதிக்கப்பட்டிருக்கு. இந்த ULPGM-V3, முந்தைய V2 வெர்ஷனை விட மேம்பட்டது, இதுக்கு முன்னாடி Aero India 2025-ல இதோட மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த சோதனை, இந்திய ராணுவத்தோட “டிகேட் ஆஃப் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்” திட்டத்துக்கு முக்கியமானது, நவீன யுத்த களத்தில் தேவையான தொழில்நுட்பங்களை விரைவா உள்வாங்க உதவுது. இந்த வெற்றி, இந்தியாவோட பாதுகாப்பு துறையில் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியிருக்கு, இனி நம்ம ட்ரோன் தொழில்நுட்பம் உலக அளவுல போட்டி போடுற அளவுக்கு உயர்ந்திருக்கு!
இதையும் படிங்க: குழந்தை விற்பனை படுஜோர்! போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்! தீவிர விசாரணை