காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!

பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்றுள்ளது.

இந்தியாவின் வெற்றியைக் கண்டு பொறுக்காத பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. நேற்றிரவு 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்த முயன்ற டிரோன் தாக்குதலை இந்திய பாதுகாப்புப் படைகள் முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தவிருந்த தாக்குதல் திட்டத்தை நமது பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. நள்ளிரவில் 15 இந்திய நகரங்களைத் தாக்குதல் நடத்த முற்பட்ட பாகிஸ்தான் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் அடங்கும். டிரோன் மூலம் தாக்க முயன்ற பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மசூத் அசார் தலைமையகம் முதல் பயிற்சி கூடம் வரை... வாஷ் அவுட் ஆக்கிய இந்திய ராணுவம்..!!