ஐதராபாத்: இன்று காலை இந்திய வரலாற்றின் புதிய பக்கம் திறந்தது! பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’-ஐ அறிமுகப்படுத்தி, ‘ஸ்கைரூட்’ என்ற தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “விண்வெளி துறையில் புரட்சிகர சீர்திருத்தம் செய்துவிட்டோம். இனி இந்திய விண்வெளி உலக முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு மையமாக மாறியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இப்போது ராக்கெட் வரை தயாரிக்கிறார்கள். இதனால் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் புது வேலைவாய்ப்புகள் உருவாகும்!” என்று பெருமிதமாக அறிவித்தார்.
மோடி மேலும் பேசுகையில், “விண்வெளி துறையில் இப்போது 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிறந்திருக்கின்றன. இது இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. இஸ்ரோ பல ஆண்டுகளாக நமக்கு துணையாக இருக்கிறது. இப்போது தனியார் நிறுவனங்களும் அதே உற்சாகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். விண்வெளி துறையைப் போலவே அணுசக்தி துறையிலும் வரலாறு காணாத சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இந்த இளைஞர்கள்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள்!” என்று உற்சாகம் ததும்ப பேசினார்.
இதையும் படிங்க: திமுகவை கடுப்பேத்தும் பாஜகவின் ‘சூப்பர் பிளான்’! டெல்லி வரை பறக்கும் ரிப்போர்ட்! “மாஸ்டர் ஸ்ட்ரோக்”!

இன்று தொடங்கி வைக்கப்பட்ட ‘ஸ்கைரூட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி நிறுவனம். இதன் ‘விக்ரம்’ தொடர் ராக்கெட்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும். இதற்கு முன்பு இஸ்ரோ மட்டுமே இப்படி ராக்கெட் செலுத்தியது. இப்போது தனியார் நிறுவனமும் அதே வேலையை செய்ய முடியும் என்பதை மோடி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
“இந்திய இளைஞர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்கள். உலக முதலீட்டாளர்கள் இப்போதே இந்திய விண்வெளி துறையை நோக்கி வரிசை கட்டி நிற்கிறார்கள்” என்று மோடி சொன்னதும், நிகழ்ச்சியில் கைத்தட்டல் பறந்தது.
விண்வெளி ரசிகர்களும் இளைஞர்களும் இப்போதே கொண்டாட்ட மூடில்! “இஸ்ரோவுக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் கம்பெனி! மோடி சார் சூப்பர் சார்!” என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆரம்பமாகிவிட்டது. இனி இந்திய விண்வெளி துறை இஸ்ரோ மட்டும் இல்லை, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கனவு நிறுவனங்களாகவும் மாறப்போகிறது!
இதையும் படிங்க: MGR, அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன்... தவெக தொண்டர்கள் புடைசூழல் மரியாதை...!