பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இரவு 10.30க்குப் பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதால் எல்லையோரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதை உறுதி செய்த இந்தியா தாக்குதல்கள் மாலை 5 மணி முதல் முடிவுக்கு வருவதாக அறிவித்தது. இதேபோல அமெரிக்காவின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது.

சண்டை சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லை மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பிளாக் அவுட் (இரவில் மூழ்கிய பகுதிகள்) செய்யப்பட்டுள்ளது. இதன்படி எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூர், ஜம்முவில் உதம்பூர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதே போல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இதனால் கட்ச் மாவட்டத்திலும் மின்விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

பாகிஸ்தானின் அத்துமீறலை உறுதி செய்த இந்திய வெளியுறவுத் துறை, தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி தர இந்திய ராணுவத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இரவு 10.30 மணிக்கு பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா அறிவித்தது. இதன் பிறகு இந்திய எல்லையில் எந்தத் தாக்குதல் சம்பவமும் பதிவாகவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி மின் வினியோகம் திருப்பித் தரப்படவில்லை. தாக்குதல் நிறுத்தப்பட்டதால் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தின் எல்லையோர மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் குண்டுச் சத்தம் கேட்கிறது.. இதுவா போர் நிறுத்தம்.? காஷ்மீர் முதல்வர் ஆவேசம்!!