ஸ்ரீநகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இது போர் நிறுத்தம் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதை உறுதி செய்த இந்தியா தாக்குதல்கள் மாலை 5 மணி முதல் முடிவுக்கு வருவதாக அறிவித்தது. இதேபோல அமெரிக்காவின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நன்றி தெரிவித்தார். இதேபோல தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை நிகழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாகக் கண்டித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில், "சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர், பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில், “ஸ்ரீநகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இது போர் நிறுத்தம் இல்லை” என்று முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
____
இதையும் படிங்க: போர் நிறுத்தப்பட்டது; ஆனால் இது கண்டிப்பா தொடரும்.. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!!
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?