பெங்களூருவில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக நினைத்த நிலையில் மயக்க மருந்து செலுத்தி இருந்ததால் அவர் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் அம்பலமானது. கணவனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து கொன்றுவிட்டு கணவன் நாடகமாடியது அம்பலமானது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சேர்ந்தவர் கிருத்திகா. இவரது கணவர் மருத்துவர் மகேந்திரன். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மாரத்தஹள்ளியில் உள்ள தந்தையின் வீட்டில் கிருத்திகா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் கிருத்திகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருத்திகா மயக்க மருந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானது. இதை எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கிருத்திகாவின் கணவரான மருத்துவர் மகேந்திரன் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: இன்னும் 100 சவரன் வாங்கினு வா... வரதட்சணை கொடுமை செய்த கணவனுக்கு லாடம் கட்டிய போலீஸ்
இதனை அடுத்து மருத்துவர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து கணவனே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!