செப்டம்பர் 9 அன்று, ஆப்பிளின் Awe Dropping நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் காத்திருந்த ரசிகர்களின் முன்னிலையில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வெறும் ஸ்மார்ட்போன் அறிமுகமல்ல. இது ஆப்பிளின் புதுமையான வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் பயனர் அனுபவத்தின் அடுத்த அளவை பிரதிபலிக்கும் ஒரு மைல்கல். ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் என நான்கு மாடல்களைக் கொண்ட இந்த சீரிஸ், iOS 26 இயங்குதளத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவின் முழு சக்தியை அளிக்கிறது.
இந்தியாவில் ரூ.82,900 முதல் தொடங்கும் இந்த போன்கள், செப்டம்பர் 12 முதல் முன்பதிவு செய்யப்பட்டு, இன்று முதல் கிடைக்கின்றன. மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முன் நீண்ட வரிசைகள் அமைந்துள்ளன, இது ரசிகர்களின் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது.ஐபோன் 17 சீரிஸின் வெளியீட்டு பின்னணி சற்று சிறப்பானது. பழைய மாடல்களைப் போலவே, ஆப்பிள் தனது ஆண்டு செப்டம்பர் நிகழ்வை கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க்கில் நடத்தியது, அங்கு CEO டிம் குக் புதிய அம்சங்களை விளக்கினார்.
இதையும் படிங்க: இதுக்குதான் அமித்ஷாவை சந்தித்தேன்! ஹப்பாடா... ஒரு வழியா சொல்லிட்டாரு பா... மௌனம் கலைத்த EPS

இந்த சீரிஸ், இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஐபோன் தொடராக இருப்பதால், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பெரிய பங்களிப்பை அளிக்கிறது. முன்பதிவுகள் உலகம் முழுவதும் தொடங்கியதும், சீனா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 63 நாடுகளில் ஆர்வம் அதிகரித்தது.
இதனிடையே, தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாகேத் மாலில், அதிகாலையில் இருந்தே ஐபோன் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் வாங்குபவர்களில் ஒருவராக இருக்க ரசிகர்கள் விடியற்காலையில் காத்திருந்தனர். ஐபோனை வாங்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல நினைத்தபோது கடும் நெருக்கடி ஏற்பட்டதுடன் நீயா நானா என வாக்குவாதம் நடந்தது.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷாவிற்கு நோ சொல்லப்போகிறாரா? - பரபரக்கும் அரசியல் களம்...!