இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைமையிலான ககன்யான் திட்டம், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். ககன்யான் என்ற சொல்லுக்கு வான வாகனம் என்று பொருள். இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மூன்று இந்திய விண்வெளி வீரர்களை பூமியின் தாழ்நிலைச் சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அங்கு மூன்று நாட்கள் தங்க வைத்து, பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப அழைத்து வருவதாகும்.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, சொந்தமாக மனித விண்வெளிப் பயணத்தை நடத்தும் நான்காவது நாடாக உயரும்.இத்திட்டத்தின் தொடக்கம் 2000களின் தொடக்கத்தில் இருந்தே விவாதிக்கப்பட்டாலும், 2018 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டிசம்பர் 2018 இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக பலமுறை தாமதமான இத்திட்டம், தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 2026 இஸ்ரோவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டு என்றும் 2027-ல் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடங்கியது கவுண்டவுன்!! அமெரிக்க செயற்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். 3 ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தனியார், நேவிக் என மேலும் பல செயற்கைக்கோளை அனுப்ப இலக்கு என்றும் 2040-க்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்... பாராசூட் சோதனை வெற்றி... இஸ்ரோ அறிவிப்பு...!