நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளித்து உள்ளனர்.
அமித் ஷா பேசுகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை ஒட்டுமொத்தமாக அழித்ததாக தெரிவித்தார். ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பகல் காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கூடாரங்களை அழித்ததாகவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: புழு விழுந்த உணவு, துர்நாற்ற நீர்! இது சமூகநீதி விடுதியா? நோய் பரப்பும் கூடாரம்.. நயினார் விளாசல்..!
மேலும், பாகிஸ்தானை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் மதிக்கவில்லை என்றும் அமித் ஷா குற்றம் சாட்டி இருந்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கமளித்த பின்னும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறியிருந்தார். வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், 22 நிமிடங்களில் தீவிரவாத கட்டமைப்பை இந்தியா தகர்த்ததாகவும், ரத்தமும் தண்ணீரும் இணைந்து பாய முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக 16 மணி நேர விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, 1947 க்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று கூறியது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
மேலும் 3 நாட்களுக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டு பயங்கரவாத ஏவுதளங்கள் அழிக்கப்பட்டதாக கூறினார்.
இதுதான் மாறிவரும் இந்தியா என்ன தெரிவித்த ஜே.பி நட்டா, என்ன செய்வது என்று பார்ப்போம் என்று சொன்னவர்களுடன் ஒப்பிட்டு அரசியல் விருப்பத்தைப் பாருங்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போட்டுக் குழப்பாதீங்க.. இபிஎஸ் எந்த உள்நோக்கத்தையும் பேசல! முட்டு கொடுத்த நயினார்..!