ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்துள்ளார். ஒரு வாரம் அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வரும் நிலையில், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கும் கொள்கைகளை திரும்பப் பெற தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காத போதே ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்த தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் பெண் பத்திரிகையாளர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது ஏற்கவே முடியாதது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களை சந்திக்காத விஜய்... மனிதாபிமானமே இல்லை! MP கனிமொழி விளாசல்...!
இந்த சம்பவத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று தாலிபான் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்துவதும் இந்திய மண்ணில் பாஜக அரசாங்கமும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் எப்படி இவ்வளவு பிற்போக்குத்தனமான, பாரபட்சமான கோரிக்கையை அனுமதிக்க முடியும் என்று கேட்டுள்ளார். மேலும் நமது சொந்த நாட்டில் கட்டளையிடப்பட்ட விதிமுறைகளை எப்படி விதிக்க முடியும் என்றும் இது ராஜதந்திரம் அல்ல, நமது ஒருமைப்பாட்டை முழுமையாக சரணடைவது, சமத்துவம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் மீதான வெட்கக்கேடான சமரசம் என்றும் சாடினார்.
இதையும் படிங்க: கனிமொழி அவர்களே...!! திமுகவை ஒரு காலத்துல காப்பாத்துனதே அதிமுக தான் தெரியுமா? - எடப்பாடி அதிரடி பதிலடி...!