பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான நிலைப்பாடு என்ன என்பதை உலக நாடுகளுக்கு வெளி காட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. பாஜக உறுப்பினர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சி எம்.பி.களையும் சேர்த்து இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. கனிமொழி, சசிதரூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஸ்பேயின் கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பரப்புரை.. ரஷ்யா குழுவுக்கு கனிமொழி தலைமை..!