பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கனிமொழி, சசிதரூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான நிலைப்பாடு என்ன என்பதை உலக நாடுகளுக்கு வெளி காட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாஜக தலைமையிலான எம்பிக்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களையும் கொண்டு குழு அமைத்துள்ளது.
இதையும் படிங்க: இடைவிடாத அர்ப்பணிப்பே சாதனைக்கு அச்சாரம்..! நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

இதில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. சசிதரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!