ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பாதியில் முடித்து கொண்டு நாடு திரும்பி உள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது.

மேலும், பஹல்காமில் இருக்கும் உள்ளூர் டாக்ஸி டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச், குப்வாரா பகுதிகளிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. அதேபோல, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் காஷ்மீர் முழுக்க பயங்கரவாதிகளை தேடி வருகிறார்கள். இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனிய காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மனதளவில் நொறுங்கிவிட்டேன். வன்முறையில் ஈடுபடுவது கோழைத்தனமான செயல், அதை நிச்சயமற்ற வகையில் கண்டிக்க வேண்டும்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் வலியை நான் நிச்சயம் புரிந்துகொள்கிறேன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
இனிமேலாவது ஜம்மு-காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இருப்பதாக வெற்று அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, மத்திய அரசு இப்போது நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது, மேலும் அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டார். அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடமும் நிலைமை குறித்து கேட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பதாக ராகுல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!