தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள், மகப்பேறின்போது தாய் (எம்எம்ஆர்), சேய் (எம்எம்ஆர்) இறப்பு விகிதத்தை குறைக்கும் ஐ.நா.வின் இலக்குகளை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மாதிரி பதிவேடு அறிக்கையை வெளியிட்ட இந்திய பதிவாளர் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, தமிழகம், கேரள உள்ளிட்ட 8 மாநிலங்கள் ஏற்கெனவே மகப்பேறில் தாய் இறப்பை குறைத்தல் இலக்கை எட்டிவிட்டன. இதன்படி கேரளா (20), மகாராஷ்டிரா (38), தெலங்கானா (45), ஆந்திரப்பிரதேசம் (46), தமிழகம் (49), ஜார்க்கண்ட் (51), குஜராத் (53), கர்நாடகா (63) ஆகும். அதாவது 2030ம் ஆண்டுக்குள் மகப்பேறில் தாயின் இறப்பை 1000 பேருக்கு 70ஆகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைந்துவிட்டன.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!
அதேபோல 2030ம் ஆண்டுக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கையும் சில மாநிலங்கள் அடைந்துவிட்டன. இதில் கேரளா (8), டெல்லி (14), தமிழகம் (14), ஜம்மு காஷ்மீர் (16), மகாராஷ்டிரா (16), மேற்கு வங்கம் (20), கர்நாடகா (21), பஞ்சாப் (22), தெலங்கானா (22), இமாச்சலப்பிரதேசம் (23), ஆந்திரப்பிரதேசம் (24), குஜராத் (24) எனக் குறைத்துவிட்டன.

இதில் 6 மாநிலங்கள் ம்டடும்தான் பச்சிளம்குழந்தைகள் இறப்பை 2030ம் ஆண்டுக்குள் 12க்கும் கீழே குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைந்துள்ளன. அதில் கேரளா (8), டெல்லி (8), தமிழகம் (9), ஜம்மு காஷ்மீர் (12), மகாராஷ்டிரா (11), இமாச்சலப்பிரதேசம் (12) என எட்டியுள்ளன.
மகப்பேற்றின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு ஐ.நா.வின் இலக்குகளை அடைந்து வருகிறது. 2019-21ம் ஆண்டு ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில், 2014 முதல் 2016ல் தாய் சேய் இறப்பு விகிதம் லட்சத்துக்கு 130 ஆக இருந்த நிலையில் 2019-21ம் ஆண்டில் 37 புள்ளிகள் குறைந்து 97ஆக இந்தியா குறைத்துவிட்டது.

பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2014ம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறப்புக்கு உயிரிழப்பு 39 ஆக இருந்த நிலையில் 2021ல் இது 27ஆகக் குறைந்தது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பும் 2014ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 45 ஆக இருந்த நிலையில் 2021ல் 31ஆக குறைந்தது.
ஐ.நா.வின் 2000-23ம் ஆண்டுக்கான மகப்பேற்றில் தாய், சேய் இறப்பு விகிதம் குறித்த அறிக்கையில் “இந்தியாவில் மகப்பேறின்போது தாய் இறப்பு விகிதம் 23 புள்ளிகள் குறைந்துவிட்டது. 1990களில் 86 சதவீதமாக இருந்த நிலையில் 2023ல் 48 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மகப்பேற்றின்போது குழந்தைகள் இறப்பு விகிதமும் 78 சதவீதம் குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொழிலதிபர், மனைவி கொடூர கொலை.. ஆடைகளின்றி கிடந்த சடலங்கள்.. கோட்டயத்தை குலைநடுங்கவிட்ட சம்பவம்..!