எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மீண்டும் ஏதேனும் அத்துமீறல்களில் ஈடுபட்டால், இந்தியாவின் பதிலடி பயங்கரவாத முகாம்களைத் தாண்டி, அந்த நாட்டின் நிலப்பரப்பு வரை ஊடுருவும் என இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவைச் சீண்ட முயன்றால், இந்திய ராணுவத்தின் தாக்குதல்கள் வெறும் எல்லைக் கோட்டுடன் (LoC) நின்றுவிடாது. பயங்கரவாதப் பயிற்சி முகாம்களைத் தாண்டி, பாகிஸ்தானின் முக்கிய நிலப்பரப்புகளுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என அவர் எச்சரித்துள்ளார். கடந்த காலங்களில் இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' போன்றத் தாக்குதல்களை விட, இனி வரப்போகும் விளைவுகள் மிகவும் கொடூரமானதாகவும், பாகிஸ்தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலும் இருக்கும் என மனோஜ் குமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் முழுவீச்சில் தயார் நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் எந்தவொரு சதித் திட்டத்தையும் முறியடிக்கத் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் வியூகங்கள் கைவசம் உள்ளதாகவும் அவர் உறுதிபடக் கூறினார். பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் அளிப்பதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அதன் விளைவுகளை அந்த நாட்டு ராணுவம் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரவி நீரை நிறுத்தப்போகும் இந்தியா..!! தண்ணீரின்றி தவிக்கும் பாகிஸ்தான்..!! ஆட்டம் ஆரம்பம்..!!
இந்திய ராணுவத் தளபதியின் இந்தத் துணிச்சலானப் பேச்சு, எல்லைப் பாதுகாப்பில் இந்தியா கொண்டுள்ள சமரசமற்றப் போக்கைப் பிரதிபலிப்பதோடு, சர்வதேச அரங்கிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!