நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 (இன்று) முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன.
பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று எனவும் முக்கிய தொடக்கங்களுக்கானது என்றும் கூறினார். ஆக்சிஜியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். விண்வெளி துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது என்றார்.
இதையும் படிங்க: அடுத்த சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் பிரதமர் மோடி.. இந்த முறை எந்தெந்த நாடுகள் தெரியுமா..??
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பணத்தை உலக நாடுகள் கண்ட வியந்ததாகவும், தீவிரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழித்ததாகவும் தெரிவித்தார். கார்ப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100% இலக்குகள் நிறைவேற்றப்பட்டதாகவும், திட்டம் வெற்றி அடைந்ததாகவும் கூறினார். மேலும், பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கு அடியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100 கோடி மக்களின் நம்பிக்கை.. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு புகழ் மகுடம் சூட்டிய பிரதமர்..!