திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமாகா தலைவர் G.K.வாசன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழகத்தில் உத்தரவாதம் இல்லை. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவு வருகின்ற தேர்தலில் திமுக தோல்வியடையும். தென் மாநிலங்களில் அதிக அளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மகளிருக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகவும் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இந்த நிலை மாறும். அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் மீண்டும் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றும்.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அதிமுக கூட்டணி வேகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இந்த கூட்டணிக்கு பிரகாசமாக உள்ளது. முதல் அணியாக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் வளர்ச்சி குறைந்து உள்ளது. மேலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை மக்கள் மீது பல வரிகளை சுமத்தி சுமையை ஏற்றி உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வாகன சோதனை தொடங்கி விட்டது. அதிகாரிகள் சாமானியர்களை அலைக்கழிக்க வேண்டாம். தவறு செய்தவர்களை தண்டியுங்கள், பிடியுங்கள் என்றார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி கட்சிகள் சமூகமாக பேசிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் இரண்டு வார கால அவகாசம் இருக்கிறது. விரைவில் அதிமுக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் எண்ணிக்கைகள் குறித்து பேசுவதற்கான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 சீட்டு கேட்டுருக்கோம்? 8 பைனல் பண்ணிக்கலமா? அதிமுக - பாஜகவுடன் பேரத்தை ஆரம்பித்த வாசன்!!
தமாகா எத்தனை தொகுதிகளை கேட்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு, கூட்டணியின் முதல் நோக்கம் ஆட்சி மாற்றம்.. கூட்டணி வெற்றி பெற வேண்டும் அதற்கான 100 சூழ்நிலையை தொகுதிகளில் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும் அதற்கு ஏற்ப கட்சிகளுக்கு எண்ணிக்கை தரப்படும் எனக்கூறினார்.
டாஸ்மாக் பூங்காவாக தமிழ்நாடு மாறிவிட்டது.போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டது இதுதான் இந்த அரசின் முடிவுக்கு காரணமாக இருக்கப் போகிறது. நெல்லை தூத்துக்குடி பல மாவட்டங்களில் பல கொலை கொள்ளைகளுக்கு தீர்வு காண முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. கூட்டணியின் மாவட்ட தலைவர்களின் இறப்புக்கே பதில் சொல்லவில்லை .அதில் கூட்டணியில் இருப்பவர்களும் கேள்வி கேட்கவில்லை. இதெல்லாம் இந்த அரசின் அவல நிலையாக இருக்கிறது. கூட்டணியில் இருப்பவர்களை ஏமாற்றுவதை போல் மக்களை ஏமாற்ற முடியாது.மக்கள் கேள்வி கேட்பார்கள் ஆட்சியை மாற்றுவார்கள்.
ரஜினியை பற்றிய ஆதவ் விமர்சனம் செய்த கேள்விக்கு, ரஜினிகாந்த் மூத்த கலைஞர் மிகுந்த மரியாதைக்குரியவர். கலை சேவையின் அடிப்படையில் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே பெருமை சேர்ப்பவர் சம்மந்தமில்லாமல் அவரைப்பற்றி பேசுவது ஏற்புடையது அல்ல. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இதனை கண்டித்து அறிக்கை தந்துள்ளேன்.
கூட்டணிக்குள் முரண்பாடு என்றால் அது திமுக கூட்டணிக்குள் தான் இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. கடந்த 15 நாட்களாக தினந்தோறும் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் காங்கிரஸ் திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது வாக்குகளை பெற முடியாது..
திமுக- தவெக இடையே தான் போட்டி என தவெக.வினர் சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு, யார் எப்படி பேசினாலும் தமிழ்நாட்டில் என் டி ஏ கூட்டணி தான் முதல் அணி மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் தேர்தல் களத்தில் எங்கள் பணி துவங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு சென்றது குறித்து?, தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் சொல்கிறாரே? அது பகல் கனவு. இதற்கு பதில் சொல்ல முடியாது.
என்டிஏ கூட்டணியில் தவெக இணையுமா.? பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறதா?, என் டி ஏ அதிமுக கூட்டணி தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று முதல் அணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வெற்றி அணியாகவே செயல்படும். எங்கள் நிலை இதுதான். தவெக.வுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறதா கூட்டணிக்கு வருமா போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க ஜி கே வாசன் மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி செய்ய தகுதி இல்ல... கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி காட்டம்..!!