தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூ.1,000 பெற்று வரும் பெண்களுக்கு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதாவது திராவிட மாடல் அரசு 2.0-இல் இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே, பெண்கள் அதிகாரமடைதல் ஒரு கோஷமல்ல என்றும் அது ஒரு பொறுப்பு எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று கூறினார். இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி கூறும் மகளிர்... அறிவாலயத்தில் 5000 ரூபாயுடன் கொண்டாட்டம்..!
அதேபோல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இரு மாநிலங்களும் பெண்களை முன்னுரிமையாகக் கொண்டு குடும்பங்களுக்கு , பொருளாதாரம் வலுப்படும் என்பதை நிரூபித்து இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
2019ல் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த “ந்யாய்” என்ற மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் கருத்து பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை என்றார். இந்தியா செல்ல வேண்டிய திசையை காட்டுகிறது என்றும் மரியாதை, பாதுகாப்பு, பொருளாதார நீதி, பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும் என்றும் கூறியுள்ளார். இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும் எனவும் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!