• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    ந்த மண்ணில் அதிமுக சார்பில் 50 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார் சாமானியரான தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன்.  
    Author By Amaravathi Fri, 08 May 2026 21:39:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    may be VG Saravanan on vijay ministry

    தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருமே நினைத்து பார்க்க முடியாத உயரத்தை தொட்டிருக்கிறது தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். ஆண்டு ஆண்டு காலமாய் தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆட்டோ ஓட்டுநர், கர்ப்பிணி பெண், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என சாமானியர்களுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    இதில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் ஜாம்பவானையே அசால்ட்டாக பின்னுக்குத் தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளார் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வென்ற வி.ஜி.சரவணன். ஜல், ஜல் என சலங்கை கட்டி ஓடும் தாமிரபரணி, கடலை முத்தமிடுவதற்கு முன்பாக பாயும் மண் தான் ஸ்ரீவைகுண்டம். பல்லாயிரக்கணக்கான வாழை சாகுபடி நடக்கக்கூடிய வளமான மண். இந்த மண்ணில் அதிமுக சார்பில் 50 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார் சாமானியரான தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன்.  

    எம்.ஜி.ஆர். காலத்தில் கிளைச்செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்.பி.சண்முகநாதன் ஜெயலலிதா காலத்தில் கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, சீனா தானா செல்லபாண்டியன், நட்டர்ஜி எம்.பி, உள்ளிட்ட பலரை அதிமுகவில் வளர்த்துவிட்ட அரசியல் சாணக்கியனாக வலம் வந்த எஸ்.பி. சண்முகநாதனை தேர்தலில் களமிறங்கிய முதல் முறையிலேயே வாஷ் அவுட் செய்திருக்கிறார் வி.ஜி.சரவணன்.

    இதையும் படிங்க: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    tvk

     ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்போர் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் வீடு தேடிப் போய் உணவு வழங்கும் அறக்கட்டளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருக்குமே தோன்றாத இந்த மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறார் அன்னை VGS மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர், அன்னை. வி.ஜி.சரவணன். 

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் முழுமைக்கும் பிரபலமாக உள்ளது வி.ஜி.எஸ் மக்கள் நல அறக்கட்டளை. பசிக்கு உணவு கொடுப்பது முதல் இறந்த ஏழை மக்களின் இறுதிச்சடங்கிற்கு  நிதி உதவி செய்வது அனாதையாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்வது வரை அன்னை வி.ஜி.சரவணன் செய்யும் சமூக நலப்பணிகள் ஏராளம். பசித்த வயிறுக்கு உணவு கொடுப்பதை பல அறக்கட்டளைகள் செய்தாலும், மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியவர்கள் உள்ள இல்லங்களை தேடிச் சென்று தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார் சரவணன்.

    இந்த சமூகப்பணியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வரும் வி.ஜி.எஸ்.,  ஸ்ரீவைகுண்டன் சுற்றுவட்டார பகுதிகலில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் இரவுஉணவு தினமும் 200 நபர்களுக்கு உணவளித்து வருகிறார். இதேபோல், அன்னை வி.ஜி.எஸ் அறக்கட்டளை சார்பில், ஏழை மக்களின் இறுதிச்சடங்கு சிறப்பாக அமைய, ஃப்ரீசர் பாக்ஸ், சவப்பெட்டி, சொர்க்க ரதம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார். அத்துடன் இறுதிச்சடங்கிற்கு பண வசதி இல்லாத ஏழை மக்களுக்கு அவர்களது நெருக்கமானவர்களின் இறுதிப்பயணம் நல்ல முறையில் அமைய தன்னால் ஆன நிதி உதவியையும் அன்னை .V.G.சரவணன் செய்து வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட யாருமற்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். 

    tvk

    கணவரை இழந்த பெண்களுக்கு தொழில் உதவி, வறுமை நிலையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க 20க்கும் மேற்பட்ட தையல் மிஷின்களை வழங்கியுள்ளார். அத்துடன் நன்றாக படிக்கும் 10, 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களது மேற்படிப்பிற்கு உதவி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வி.ஜி.சரவணன் கடந்த 2  வருடங்களாக சிறப்பான களப்பணிகளை செய்து வந்தார்.  ஸ்ரீவைகுண்ட தொகுதியில் தண்ணி இல்லாத பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குகிறார். தினமும் 500 குடும்பங்களுக்கு மேல் தண்ணி வழங்கி வருகிறார். ஏரல் பேரூராட்சியில் தளபதி பயிலகம் ஆரம்பித்து இன்று வரை கல்வி சேவை செய்து வருகிறார்.  

    தளபதி தொழில் பயிலகம் ஆரம்பித்து ஸ்ரீவைகுண்ட தொகுதியில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு கட்டணம் இல்லாமல் தையல் ஒர்க் ஆரி ஒர்க் தொழில் பயிற்சி வழங்கி வருகிறார். இப்படி மக்களோடு மக்களாக களப்பணியாற்றி வரும் வி.ஜி.சரவணனை பெருவாரியான வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற வைத்து எம்.எல்.ஏ.வாக அழகு பார்த்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள், தற்போது அவரை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமூகத்தினர் அதிகமுள்ளதால், அங்கு வெற்றி பெறும் இரு எம்.எல்.ஏ.வை அமைச்சரவையில் அமர வைப்பதை அதிமுகவும், திமுகவும் வழக்கமாக கொண்டுள்ளது. அதேபாணியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வென்றுள்ள வி.ஜி.சரவணனும் அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    இதையும் படிங்க: தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    மேலும் படிங்க
    பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!

    பாதி வழியிலேயே இடியை இறக்கிய ஆளுநர்... யூ-டர்ன் அடித்து வீட்டிற்கு ஓடிய விஜய்... பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்...!

    அரசியல்
    #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    தமிழ்நாடு
    விஜய் மீது குதிரை பேர குற்றச்சாட்டு... கொதித்தெழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் பேபி...!

    விஜய் மீது குதிரை பேர குற்றச்சாட்டு... கொதித்தெழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் பேபி...!

    அரசியல்
    டெல்லிக்கு மீண்டும் குறி!! பாக்., ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 9 பேர் கைது!! முறியடிக்கப்பட்ட சதி திட்டம்!

    டெல்லிக்கு மீண்டும் குறி!! பாக்., ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 9 பேர் கைது!! முறியடிக்கப்பட்ட சதி திட்டம்!

    இந்தியா
    #BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

    #BREAKING: ஆட்சி அமைக்கிறது தவெக..! புதிய அரசுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!

    #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share