பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 45 ஆகவும், எருமைப்பாலுக்கான விலையை ரூ.60 ஆகவும் தமிழக அரசு உயர்த்த வேண்டும் என சேலத்தில் நடந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. ஆவின் பால் கொள்முதல் தர பரிசோதனையில் எம்ஆர்எஃப் முறையை கைவிட்டு ஐஎஸ்ஐ தர பரிசோதனை முறையை அமல்படுத்த வேண்டும். சென்னை மாநகர எல்லைக்குள்ளாக ஆவின் பால் நுகர்வோருக்கு மாதாந்திர முன் கட்டணம் செலுத்தி சலுகை விலையில் பால் அட்டை பெறும் நடைமுறையை தமிழகம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஆவின் பால் நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, அந்த சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45 ஆகவும், எருமைப் பாலுக்கான விலையை ரூ.60 ஆகவும் தமிழக அரசு உயர்த்த வேண்டும். தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆவின் பொருள்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்... 1,632 கி.மீட்டருக்கு கோர தாண்டவம்... ஒட்டுமொத்த சேத மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
ஆனால் ஆவின் விற்பனை பணியாளர்கள் தங்கள் பணியில் 25 சதவீதம் கூட பணியாற்றுவதில்லை. தனியாருக்கு பால் தரத்தை பரிசோதனை செய்வதற்கான சோதனையை வரையறைறுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மணல் மாஃபியா போன்று ஆவின் மாஃபியா குழு ஒன்று உள்ளது. அவர்களை தாண்டி செயல்பட முடியவில்லை. முறைகேடுகள் நடப்பது குறித்து ஆதாரப்பூர்வமாக பிடித்து கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை. ஆவின் மாஃபியா கும்பல்கள் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் அதற்கு நிகராக தனியார் நிறுவனம் இருந்து கையூட்டு பெறுகிறார்கள்.
பால் தரத்தை சிறிதளவு குறைத்ததால், லிட்டருக்கு பைசா கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆவின் நிர்வாக சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பால்வள வாரியத்தில் மூன்று ஆண்டுகள் கட்டுப்பாட்டில் விட்டுவிடுங்கள். விற்பனை இழப்புகளை எங்களுக்கு வழங்க விட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு எழுத்து மூலமாக கொடுத்துள்ளோம். ஊக்கத் தொகையையும், வருவாய் இழப்பையும் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு தான் வழங்க வேண்டும். அரசு நிதியிலிருந்து தான் ரூ.1,700 கோடி இழப்பை வழங்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: INDvsPAK விவகாரம்: 7 புத்தம் புதிய அழகான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன..!! மீண்டும் அடித்துவிடும் டிரம்ப்..!!