ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரின் சௌத் கா பர்வாரா பகுதியில் உள்ள பனாஸ் நதிக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அதன் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) லாபுராம் விஷ்னோ தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் மீது மணம் மாஃபியா கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) லாபுராம் விஷ்னோயின் வாகனத்தை சட்டவிரோத மணல் அள்ளுபவர்கள் தீ வைத்ததால் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது போலீசாருக்கும் மணம் மாஃபியாவுக்கும் இடையேயான மோதலில் பண்டியைச் சேர்ந்த டிராக்டர்-டிராலி ஓட்டுநர் சுர்க்யன் மீனா என்பவர் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. மேலும் சுர்க்யன் மீனாவின் மரணத்தை ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சுமன் குமார் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தத்துக்கு பிறகும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிளாக் அவுட் உத்தரவு.. மீண்டும் பீதியில் மக்கள்.!

இதனிடையே உயிரிழந்த சுர்க்யனின் சகோதரர் ராம்பிரசாத் மீனா, டிஎஸ்பி விஷ்னோய், சுர்க்யனை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், இதனால் தான் அவர் உயிரிழந்ததாகவு குற்றம் சாட்டினார். மேலும் இதுக்குறித்து போலீசார் சுர்க்யனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் புத்திசாலித்தனமாக உடலை சவாய் மாதோபூரின் பிணவறைக்கு அனுப்பிவிட்டதாகவும் ராம்பிரசாத் குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சௌத் கா பர்வாரா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் அவர் பெரும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதை அடுத்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் மம்தா குப்தா உறுதியளித்தார்.மேலும் சோதனையின் போது சுரங்கத் துறை அதிகாரிகள் இல்லாதது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மணல் மாஃபியா மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர், மேலும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!