தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி பருப்பு சீனி உள்ளிட்ட பொருட்களை சில்வர் பாத்திரங்களில் வைக்கவும், கடைகளின் முன்பு மேற்கூறை (கூலிங் சீட்) மற்றும் இருக்கைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கொத்தயம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்து,புதிய தார் சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது, அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களை சில்வர் பாத்திரங்களில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: லட்சக்கணக்கில் சம்பளம்... ஆனாலும் ரேஷன் வாங்குறீங்களா? அப்போ ஜெயிலுக்கு போகப்போறீங்க...!
ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் மழையில் நனையாமலும், வெயிலில் நிற்காமல் இருக்க கடையின் முன்பு மேற்கூறை (கூலிங் சீட்) மற்றும் இருக்கைகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க: ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அவசர நிலை அறிவிப்பு..!!