கீழடி விவகாரம், ஹிந்தி திணிப்பு, வாக்குத்திருட்டு என பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இதற்கெல்லாம் பதில் வருமா அல்லது வழக்கம் போல் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி பிரச்சாரம் செய்வீர்களா என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பிறகு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி என கேள்வி எழுப்பினார். நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஹிந்திலும் சமஸ்கிருதத்திலும் மட்டும் பெயரிடுவது என்ன மாதிரியான ஆணவம் என கடுமையாக கேட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சாடினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று காட்டமாக கேட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை SIR ஆதரிப்பது ஏன் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அருமையான அறிவிப்பு... ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்... விசிக தலைவர் திருமா. வரவேற்பு...!
இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன் என்றும் கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கெல்லாம் பதில் வருமா… இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா என்றும் மத்திய பாஜக அரசுக்கு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். இந்த கேள்விகள் அனைத்தும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனதில் மட்டுமல்லாமல் ஏராளமானோர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆணையம், குழுவால் என்ன பயன்? கொஞ்சம் சொல்லுங்க ஸ்டாலின்! அண்ணாமலை சரமாரி கேள்வி…!