வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

தமிழ்நாட்டின் அடையாளம் “நான் முதல்வன்”.. ஒரு அப்பாவாக ரொம்ப பெருமை! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கே வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது, நான் முதல்வன் திட்டத்தில் என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும் என தெரிவித்தார். எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்த எத்தனை பேர் வெற்றி பெற்று உள்ளார்கள் என்று தான் அதிகாரிகளிடம் கேட்பேன் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

ஒவ்வொரு குழந்தைகள் வெற்றி பெறும் போதும் தந்தை போல் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பணி நியமனத்தை பெற்றுள்ளனர் என்றும் நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்றும் தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வி, திறனறிவு, எதிர்காலத்திற்கு வழி காட்டுவதாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

யுபிஎஸ்சி தேர்வு வெற்றி பெற்றவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர்கள் எனவும் 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் பணி நியமனம் கிடைத்துள்ளது., கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் கொடுக்க இருக்கிறோம்., கல்வியை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்…உங்களுக்கு உதவுவதற்காக நானும் திராவிட மாடல் அரசும் இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी