விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" பயிற்சிக்கூட்டம் இன்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி தலைமையில் நடைப்பெற்றது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,திமுக மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பெண் பாக முகவர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. அத்தகைய ஆற்றலை உடையவர்கள் நீங்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று பெரியார் சொன்னார். அதை செயல்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. சட்டம் போட்டு சொத்துரிமையுடன் கொண்டு வந்தவர் கலைஞர் இதை நடைமுறைப்படுத்தி வருபவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.
மகளிர்கள் எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். எனவே நீங்கள், இல்லந்தோறும் சென்று தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை அதிலும் குறிப்பாக மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பற்றி எடுத்துக்கூறுங்கள். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர்களுக்கு ஏதாவது செய்தார்களா?வரக்கூடிய தேர்தலிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கப்போகிறது.
இதையும் படிங்க: அவ்ளோ முட்டாள் இல்ல. ! DMK மோசடி வலையில் மகளிர் சிக்க மாட்டார்கள்..நயினார் உறுதி..!
நிரந்தர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இங்கு வந்துள்ள மகளிர்கள் இல்லந்தோறும் சென்று மக்களை சந்தித்து 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் பேசுங்கள். அப்படி பேசினாலே நாம் செய்திருக்கிற நன்மைகள் அவர்களுக்கு தெரியும். மகளிர்கள் நினைத்தால் எல்லாவற்றையும் வென்றெடுக்கலாம். 200 தொகுதிகள் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று பொன்முடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!