வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோந்தா புயல் தற்பொழுது கரையை கடக்க ஆயத்தமாகி வருகிறது. ஆந்திராவின் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 8:30 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்கு வரத்திற்கு தடையானது விதிக்கப்பட்டிருக்கிறது. இரவு 8:30 மணி முதல் காலை 6 மணி வரை ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்தானது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா, ஏலூரு, கோதாவரி, கோணசீமா, அல்லூரு, சீதாராமராஜு, சிந்தூர், ராம்பச்சோடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு தடையானது விதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் அவசர மருத்துவ பணிகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மோந்தா புயலானது ஆந்திரா அருகே மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையில் கரைய கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று இரவு நள்ளிரவு புயலானது கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு வெளியிட்டு வருகிறது.
நெடுஞ்சாலைகளில் கூட வாகனங்களில் பயணிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணா, ஏலூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, பி.ஆர் அம்பேத்கர், கோணசீமா, அல்லூரு, சிந்தூரு அப்படின்னு ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 8:30 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இந்த வழித்தடங்களில் இருக்கக்கூடிய அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகன போக்குவரத்து ஆனது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புயல் எதிரொலி... ஆக்ரோஷ அலைகள்… காசிமேடு, திருவொற்றியூர் கடல் பகுதியில் சீற்றம்…!
அவசர தேவைக்காக மாவட்ட ஆட்சியர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட நிர்வாக வாகனங்கள் மற்றும் மருத்துவ வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். ஒருவேளை அந்த பகுதி பாதிக்கப்படும் பகுதியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்றுவிடுங்கள் என்ற அறிவுறுத்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார வயர்கள் அல்லது டிரான்ஸ்பார்மர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக காக்கிநாடா முழுவதும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முழுவதும் காக்கிநாடாவில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக, ஆந்திராவில் 116 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 150 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக காக்கிநாடா-உப்பாடா கடற்கரை சாலையில் கடல் கொந்தளிப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு