டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ உச்சிமாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும்” என்று அவர் உறுதியளித்தார்.
முகேஷ் அம்பானி பேசியதாவது: “இதுவரை உலகில் சிறந்த ஏஐ செயலி உருவாகவில்லை. ஆனால் இந்தியாவால் சிறப்பான ஏஐ சகாப்தத்தை உருவாக்க முடியும். ஒருபுறம் அதிக செலவில் ஏஐ கிடைக்கிறது. மறுபுறம் மலிவு விலையில் ஏஐ பயன்படுத்த வழி உள்ளது. ஜியோ மொபைல் டேட்டாவில் செய்தது போலவே ஏஐ தொழில்நுட்பத்திலும் புரட்சி ஏற்படுத்தும். இது வெறும் முதலீடு அல்ல – வளர்ச்சி அடைந்த தேசத்தை கட்டியெழுப்பும் மூலதனம்.”
அவர் மேலும் கூறியதாவது: “ஜியோ இந்தியாவை இணைய சகாப்தத்துடன் இணைத்தது. இப்போது ஏஐ தொழில்நுட்பத்திலும் அதேபோல் நடக்கும். மக்கள் அனைவருக்கும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கும், சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏஐ பயன்படும். நம்பகமான, மலிவு விலையில் ஏஐ-யை அணுக ஜியோ வழிவகை செய்யும்.”
இதையும் படிங்க: ட்ரம்ப் போட்ட திட்டம்!! அம்பானிக்கு அடிச்சது ஜாக்பாட்! வெனிசுலா ஆயிலை இறக்குமதி செய்ய Reliance-க்கு அனுமதி!

ஏற்கனவே ஜியோ இந்தியாவில் மொபைல் டேட்டாவை மலிவு விலையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்து டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது. அதே போல ஏஐ தொழில்நுட்பத்தையும் பொதுமக்களுக்கு எட்டக்கூடியதாக, எளிதில் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற ஜியோ திட்டமிட்டுள்ளது. இந்த ரூ.10 லட்சம் கோடி முதலீடு இந்தியாவின் ஏஐ துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டெக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ-யில் இந்தியா உலக முன்னணி நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இந்த உறுதி இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. ஜியோவின் AI புரட்சி இந்தியாவை உலக அளவில் தொழில்நுட்ப சக்தியாக உயர்த்தும் என்று பொருளாதார வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கின்னஸ் சாதனை!! இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை!! 2.5 லட்சம் பேர் உறுதியேற்பு!