கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆட்சியைப் பிடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிக் அடித்த அமித் ஷா... நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி...!
இந்த நிலையில், அனைவரையும் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையன் கருத்து தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லது தான் என்று தெரிவித்தார். இருப்பினும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் நெல்லையில் பேசியபோது நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியாக அகற்றி விட முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்