கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. அங்கு கருவறை வாசலில் இருபுரமும் உள்ள துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் 2019ல் எடுக்கப்பட்டு செப்பனிடும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் போத்தி ஏற்றார். பணிகள் முடிந்து கவசங்கள் ஒப்படைக்கப்பட்டபோது அதில் 4 கிலோ தங்கம் மாயமானது தெரிய வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள உயர்நீதிமன்றம் தங்கம் மாயமானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. பலகட்ட விசாரணைக்கு பின் இந்த விவகாரத்தில் உன்னிகிருஷ்ணன் போத்தி கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போின் முன்னாள் தலைவர் பத்மகுமார், நகை கடைக்காரர் கோவர்தன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எந்த விவகாரத்தில் சர்வதேச தொல்லியல் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள எம்எல்ஏவுமான ரமேஷ் ஜன்னிதலா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு பொருளாய்வு குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் மாயமானது வெறும் திருட்டு சம்பவம் அல்ல. முக்கிய இந்து கோவில்களில் இருந்து விலைமதிப்பெற்ற பழங்கால பொருட்கள் சிலைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து கடத்துவதற்கான பெரிய சதி திட்டத்தை இது உள்ளடக்கியது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பக்தர்களே உஷார்... அமீபா மூளை காய்ச்சல்.. சபரிமலை செல்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்...!
இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல. திறைக்கு பின்னால் மிகப்பெரிய சதி கும்பல் உள்ளது. இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்புள்ளது. அந்த கும்பலின் நடமாட்டம் அறிந்த நபர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை என்னிடம் கூறினார். அவர் கூறியது அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் நம்பகமானவையும் கூட. இந்த விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்கம் மாயமான விவகாரத்தில் 500 கோடி ரூபாய் கைமாறி உள்ளது.
கேரள தொழிலதிபர்கள் உட்பட பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதும் உறுதியாகி உள்ளது. தங்க கவசம் கொள்ளையடிக்கப்பட்டதில் சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பது குறித்த விவரங்களை அளிக்க தயாராக உள்ளே. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவும் தயாராக உள்ளே எனவே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி திறைமறைவில் உள்ள சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை படிக்காவே இல்ல! வேணாம்னு சொன்னா எப்புடி? உக்ரைன் அதிபர் மீது ட்ரம்ப் அதிருப்தி!