அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவோட வர்த்தக உறவுல பெரிய குண்டை தூக்கி போட்டு, உலக நாடுகளையே திரும்பி பார்க்க வச்சிருக்கார். இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குறதை எதிர்த்து, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிச்சு, “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவோட எந்த வர்த்தக பேச்சுவார்த்தையும் கிடையாது”ன்னு வெள்ளை மாளிகையில செய்தியாளர்களை சந்திச்சு அடம்பிடிச்சு சொல்லியிருக்கார்.
இந்தியாவும், “இது நியாயமில்லை, எங்க தேசிய நலன்களுக்கு எதிரானது”ன்னு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுல பெரிய புயலை கிளப்பியிருக்கு. இந்த அறிவிப்பு, செப்டம்பர் 2025-ல டில்லியில நடக்க வேண்டிய குவாட் மாநாட்டையே கேள்விக்குறியாக்கியிருக்கு.
ட்ரம்ப் இந்த முடிவுக்கு காரணமா, இந்தியாவோட ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை சுட்டிக்காட்டுறார். “ரஷ்யா உக்ரைனுக்கு எதிரா போர்ல இருக்கும்போது, இந்தியா அவங்களுக்கு ஆதரவா எண்ணெய் வாங்குது”ன்னு குற்றம்சாட்டி, முதல் 25% வரி விதிச்சு, இப்போ மறுபடியும் 25% கூடுதல் வரி விதிச்சிருக்கார். இந்த 50% வரி ஆகஸ்ட் 27-ல அமலுக்கு வருது.
இதையும் படிங்க: 10% முதல் 41% வரை வரி!! உலக நாடுகள் மீது ட்ரம்ப் தொடுக்கும் வர்த்தக போர்!! எந்த நாட்டுக்கு எவ்வளவு வரி?
இதனால, இந்தியாவோட துணி, மருந்து, ஐடி சேவைகள், நகைகள் மாதிரியான ஏற்றுமதி பொருட்கள் கடுமையா பாதிக்கப்படும். 2024-25 நிதியாண்டுல இந்தியாவோட அமெரிக்க ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலரா இருந்தது, இது 40-50% குறையலாம்னு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்குறாங்க. அமேசான், வால்மார்ட் மாதிரியான பெரிய நிறுவனங்கள் இந்திய ஆர்டர்களை நிறுத்தி வச்சிருக்காங்க, இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அடியா இருக்கு.

இந்திய வெளியுறவு அமைச்சகம், “எங்க வர்த்தக முடிவுகள் 140 கோடி மக்களோட தேவையை பொறுத்து இருக்கு. மூணாவது நாடு தலையிடுறதை ஏத்துக்க மாட்டோம்”ன்னு கறாரா சொல்லியிருக்கு. பிரதமர் மோடி, “விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களோட நலன்களுக்கு எந்த சமரசமும் இல்லை. எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் இந்தியா தயார்”ன்னு தெளிவா அறிவிச்சிருக்கார்.
இந்த சூழல்ல, மோடி பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவோட பேசி, பிரிக்ஸ் கூட்டணியை வலுப்படுத்துறதுல கவனம் செலுத்துறார். சீனாவுக்கு மோடி இப்போ செல்ல தயாராகுறது, கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியாவோட முக்கியமான நகர்வா பார்க்கப்படுது.
இந்த வரி மோதல், இந்தியா-அமெரிக்கா உறவை மட்டுமல்ல, குவாட் அமைப்பையே பலவீனப்படுத்தலாம்னு ஆஸ்திரேலிய அதிகாரிகள் கவலைப்படுறாங்க. “இந்தியாவும் அமெரிக்காவும் மோதிக்கிட்டா, சீனாவோட ஆதிக்கம் இந்தோ-பசிபிக் பகுதியில வலுக்கும்”ன்னு ஆஸ்திரேலியாவோட பிராந்திய கொள்கை மைய அதிகாரி ராஜி பிள்ளை ராஜகோபாலன் எச்சரிச்சிருக்கார்.
அமெரிக்காவுலயே ஜனநாயக கட்சியோட செனட்டர் க்ரிகோரி மீக்ஸ், “ட்ரம்போட இந்த பிடிவாதம் 20 வருஷ உறவை பாழாக்குது”ன்னு விமர்சிச்சிருக்கார். இந்தியா இப்போ உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலமா புகார் கொடுக்கவும், சவுதி அரேபியா, ஈராக் மாதிரியான நாடுகளோட எண்ணெய் ஒப்பந்தங்களை விரிவாக்கவும் திட்டமிடுது.
இதையும் படிங்க: நல்லாத்தான் பேசுறாரு!! ஆனா குண்டு போடுறாரே! புதினை பாராட்டுவது போல வாரிவிடும் ட்ரம்ப்!