• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கம்யூனிஸ்டுகள் பிரிந்தாலும் தவெகவுக்கு பின்னடைவு இல்லை: வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

    கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுவதால் தவெகவுக்குப் பின்னடைவு இல்லை என்றும், விவசாய நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 14 Sep 2026 15:44:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Setback for TVK in By-Elections Over CPM Stand: Minister Sengottaiyan in Vellore

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துக் களம் காண்பதால் ஆளுங்கட்சியான தவெகவுக்கு எந்தவொரு பின்னடைவும் ஏற்படப் போவதில்லை என்றும், பிரிட்டிஷ்காரன் ஆட்சிக் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த விவசாய நிலவரியை முற்றிலுமாக ரத்து செய்து நமது அரசு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வேலூரில் செய்தியாளர்களிடம் மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் பேட்டியை நிறுத்தாமல், அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது செல்போன்களின் டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்ச, அந்த செல்போன் வெளிச்சத்திலேயே அமைச்சர் தனது காரசாரமான பேட்டியைத் தொடர்ந்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அங்கு மின்சாரம் மீண்டும் சீரானது.

    செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "முதலமைச்சர் தளபதி விஜய் தலைமையிலான ஆட்சியில் அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகின்றன. சாதி, மதப் பாகுபாடற்ற உண்மையான மக்கள் நல அரசு இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்துப் பலரும் கேட்கிறார்கள்; ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான கொள்கைகள் உள்ளன. அந்தந்தக் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் களம் காண்கிறார்கள். இதனால் ஆளுங்கட்சியான தவெகவிற்கு எந்தவொரு இடத்திலும் எள்முனையளவும் பின்னடைவு ஏற்படாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    அமைச்சர் செங்கோட்டையன்

    இதையும் படிங்க: தவெக அரசுக்கு ஆதரவு தொடரும்.. திமுகவுக்கு ஆதரவல்ல: இடைத்தேர்தல் குறித்து சிபிஎம் சண்முகம்!

    விவசாய நிலங்களை மாற்று பயன்பாட்டிற்கு மாற்றுவதால் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்ற விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "அன்றைய காலத்தில் உழைக்கும் மக்கள் எவ்வளவு உணவு உட்கொண்டார்கள், இன்றைக்கு மக்கள் எந்தளவிற்கு உணவு அருந்துகிறார்கள் என்பதை நீங்களே நன்கு அறிவீர்கள். அன்றைய காலத்தை விடத் தற்போது விவசாயிகளுக்குத் தேவையான உயர்தர விதைகள், உரங்கள் தடையின்றி வழங்கப்படுவதால் விளைச்சல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நமது தேவையை விடக் கூடுதலாகவே தானியங்களும் காய்கறிகளும் உற்பத்தியாகி கையிருப்பில் உள்ளன. உணவுப் பாதுகாப்புக்குப் பேரழிவு ஏற்படும் என்பது தேவையற்ற வீண் பயம். விவசாய நிலங்களை வேளாண் அல்லாத மாற்று பயன்பாட்டிற்கு எளிதாகக் கொண்டு வருவதற்காக அரசு தனி ஆணையம் ஒன்றை நிர்ணயித்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்த அந்த அதிகாரம் தற்போது தனி ஆணையத்திற்கு மாற்றப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது; உள்ளாட்சி அமைப்புகளுக்கான நடைமுறைகளும் இதில் முறையாகப் பின்பற்றப்படும்" என்று விளக்கமளித்தார்.

    தொடர்ந்து நிலவரி ரத்து குறித்துப் பேசிய அமைச்சர், "பிரிட்டிஷ்காரன் ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ இல்லாத காரணத்தால் விவசாய நிலங்களுக்கு மட்டுமே வரி விதித்தார்கள். ஆனால் இன்றைக்குத் தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பிலிருந்தும் வரி வருவாய் கிடைக்கிறது. எனவே எளிய விவசாயிகளுக்கு நிலவரி தேவையில்லை என்ற உன்னத நோக்கில், ஏறத்தாழ 28 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து விவசாய நிலவரியையும் நமது அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. மேலும், டிசி (DC) பஞ்சமி நிலங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் ஒருவரிடம் இருந்தால், அதனை அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பதற்கும் மாற்றுவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் இணையதள சர்வர் பிரச்சினைகள் விரைவில் சரிசெய்யப்படும். துறைக்கு 1,500 சர்வேயர்கள் புதிய தொழில்நுட்பக் கருவிகளுடன் விரைவில் நியமிக்கப்பட்டு, நிலங்களை நேரில் முறையாக அளவீடு செய்து அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் பட்டாக்கள் வழங்கப்படும். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அறிக்கை கேட்பவர்களுக்குச் சொல்கிறேன், வெளியில் இருந்து பேசுவது மிகச் சுலபம்; தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவதில்தான் அதன் நடைமுறைச் சவால்கள் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சட்டசபையில் விஜய்யின் அந்த சைகை..!! தவெக ஆர்டர் செய்த விநாயகர் சிலைக்கு வந்த சிக்கல்..!!

    மேலும் படிங்க
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    பரமத்தி வேலூரில் பயங்கர நாட்டு வெடி விபத்து: இருவர் பலி, 4 பேரை மீட்க போராட்டம்!

    தமிழ்நாடு
    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share