ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவுடன் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வாகா எல்லை மூடப்பட்டது மற்றும் பாகிஸ்தான் உடனான வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் ஏவுகணை சோதனை மற்றும் தீவிரவாதிகளின் வீடுகள் கண்டறியப்பட்ட தவிர்க்கப்பட்டு வருகிறது. இதுபோல பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், தலைமை தளபதி, பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டருடன் பிரதமர் மோடி பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?

ஆனால் பகல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பகல்காம் தீவிரவாத தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் அமைதி நிலை, மாநில மக்களின் பாதுகாப்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியுடன் உமர் அப்துல்லா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இலங்கையிலும் தமிழ் பற்று... உளப்பூர்வமாக நெகிழ்ந்த பிரதமர் மோடி..!