ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு துல்லியமான, உயர் தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள குடிமகன் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு உத்தியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு 26 சுற்றுலாப் பயணிகளை மத அடிப்படையில் பிரித்து கொடூரமாகக் கொலை செய்தது. இந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளையாக செயல்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான மறுப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க மறுத்தது இந்தியாவை உறுதியான மற்றும் துல்லியமான பதிலடி நடவடிக்கைக்கு தூண்டியது. இதன் விளைவாக, ஆபரேஷன் சிந்தூர் மே 7 அன்று தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை வெளிப்படுத்தியது.

இதனிடையே ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கிய வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகின்றன, தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு இருந்தன உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கும் வகையாக பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மூன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான பாடத்திட்டங்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: களைகட்டிய சோழதேசம்! பிரதமர் கொண்டு வரும் முக்கிய பொருள் என்ன தெரியுமா?
இதையும் படிங்க: அதிமுக மாஜி அமைச்சர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மூடி மறைக்க செய்த சதி...!