பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் 27 அப்பாவி உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இத்தாக்குதலை திட்டமிட்டு பயங்கரவாதிகள் நடத்தினர். இதற்கு பதிலடி தருவதற்கு இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இந்தியா இலக்கு வைக்கபவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. இத்தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை போர் ஒத்திகை... எங்கெங்கே தெரியுமா? வெளியானது முக்கிய தகவல்!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெஃரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எல்லையில் பூன்ச் ரஜூரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியாவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ஏன் தவிர்த்தார்.? குடையும் கார்கே!