ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு 26 சுற்றுலாப் பயணிகளை மத அடிப்படையில் பிரித்து கொடூரமாகக் கொலை செய்தது. இந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளையாக செயல்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான மறுப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க மறுத்தது இந்தியாவை உறுதியான மற்றும் துல்லியமான பதிலடி நடவடிக்கைக்கு தூண்டியது. இதன் விளைவாக, ஆபரேஷன் சிந்தூர் மே 7 அன்று தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை வெளிப்படுத்தியது.
இந்த சம்பவம் உலக அரங்கில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது. பாகிஸ்தானின் பல்வேறு நிலைகளை குறிவைத்து இந்திய கடும் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஒரு துல்லியமான, உயர் தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கை.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு உத்தியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தியது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் பகல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் புகைப்படம் உள்ளிட்டவை வெளியான நிலையிலும் அவர்கள் பிடிப்படாமல் இருந்து வந்தனர். அவர்களை தீரும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். ராணுவம், crpf வீரர்கள் உள்ளிட்டோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது சுற்றி வளைக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் பற்றி விளக்கியே ஆக வேண்டும்! டி.ஆர். பாலு திட்டவட்டம்...
பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடங்காத தீவிரவாதிகள்... சுட்டு வீழ்த்துவோம்! சூளுரைத்த இந்திய ராணுவம்