பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் அதிரடி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

பூஞ்ச் ரஜூரி பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 15 பேர் உயிரழந்த நிலையில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். தினேஷ்குமார் என்ற ராணுவ வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முப்படைகளும் தயார்! பாகிஸ்தானை பதம் பார்க்க காத்திருக்கும் வீரர்கள்...
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன. இதில் பாகிஸ்தானில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு.. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றது அம்பலம்!